உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசின் பெற்றோரை தாக்கிய கணவர் கைது

பெண் போலீசின் பெற்றோரை தாக்கிய கணவர் கைது

வண்ணாரப்பேட்டை,சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் துர்கா, 27. பெண் காவலர். இவரது கணவர் ஜீவரத்தினம், 30, வழக்கறிஞர்.இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. இதுகுறித்து தன் தந்தை செந்தாமரைக் கண்ணன், 65, தாய் தேவசேனா, 56, ஆகியோரிடம் துர்கா தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் வந்ததை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியது.இதில் ஆத்திரமடைந்த ஜீவரத்தினம், கட்டையால் துர்காவின் பெற்றோரை தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தலையிட்டு, இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். துர்கா கொடுத்த புகாரின்படி, ஜீவரத்தினம் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி