உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே வாரத்தில் மனைவியுடன் வாழ மறுத்த கணவர் கைது

ஒரே வாரத்தில் மனைவியுடன் வாழ மறுத்த கணவர் கைது

அண்ணா நகர், அமைந்தகரையைச் சேர்ந்த, 22 வயது பட்டதாரி பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அமைந்தகரையைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 27. இவர் என்னை காதலித்து, கடந்த 24ம் தேதி, பாடியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின், மயிலாடுதுறையில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவரது குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு, என்னிடம் வாழ மறுக்கிறார் என குறிப்பிட்டிருந்தார். தினேஷ்குமாரிடம் போலீசார் விசாரித்ததில், மனைவியுடன் வாழ முடியாது எனக் கூறியதாக தெரிகிறது.அவரை கைது செய்து கொலை மிரட்டல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ