உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஸ் கசிவால் தீ விபத்து கணவர் பலி; மனைவி சீரியஸ்

காஸ் கசிவால் தீ விபத்து கணவர் பலி; மனைவி சீரியஸ்

காசிமேடு:வீட்டில் 'காஸ்' கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் கணவர் உயிரிழந்தார்; மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிமேடு, துரை தெருவைச் சேர்ந்தவர் சேகர், 70; மீனவர். இவரது மனைவி மஞ்சுளா, 60. நேற்று மாலை சமைப்பதற்காக 'காஸ்' அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது சிலிண்டர் டியூப் வழியாக காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டு சமையலறையில் இருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்தன. இந்த விபத்தில், மஞ்சுளாவை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் சேகர், தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மஞ்சுளாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி