உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புறக்கணிக்கப்படும் வார்டுகள் கவுன்சிலர்கள் குமுறல்

புறக்கணிக்கப்படும் வார்டுகள் கவுன்சிலர்கள் குமுறல்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலத்தில், 47, 65, 66, 69, 70 ஆகிய ஐந்து வார்டுகள் அ.தி.மு.க., வார்டுகளாகும். இந்த வார்டுகளில், ஒன்றரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை என, அக்கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:சாலை, சுடுகாடு பணிகளுக்கு 'டெண்டர்' விட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை பணிகள் துவக்கப்படவில்லை.வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, கடிதம் எழுதி கொடுத்தாலும், அதை தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், சாலை, கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடக்காததால், மக்களிடம் பதில் கூற முடியாமல் சிரமப்படுகிறோம். அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், போதிய பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி கவுன்சிலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை