ஐ.எம்., நார்ம் செஸ் துவக்கம்
சென்னை: 'சக்தி' குழுமம் சார்பில் 35வது ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, போரூரில் நேற்று துவங்கியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஹேமந்த் ராம், பரத் கல்யாண் மற்றும் சஞ்சய் நாராயணன், குஜராத்தைச் சேர்ந்த முகுந்த் ஹேமந்த் அகர்வால், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அனிருத்தா ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஐந்து வெளிநாட்டு பட்டம் பெற்ற வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.