உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமங்கலத்தில் பேனர் கலாசாரம் துவக்கத்திலேயே நடவடிக்கை அவசியம்

திருமங்கலத்தில் பேனர் கலாசாரம் துவக்கத்திலேயே நடவடிக்கை அவசியம்

திருமங்கலம்,பிரமாண்ட விளம்பரப் பலகைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு 1998ல் நடவடிக்கை எடுத்தது. இதை, உறுதிப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தன. இருப்பினும், சிலர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, விளம்பரப் பலகை வைப்பது அதிகரித்துள்ளது.நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் அலட்சியத்தால், மீண்டும் சென்னையில் பல இடங்களில் திடீர் விளம்பரப் பலகைகள் முளைக்க துவங்கி உள்ளன.குறிப்பாக, சென்னை, அண்ணா நகரை அடுத்து, திருமங்கலம் பகுதிகளில், சமீபகாலமாக விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னையில் பிற இடங்களை விட அண்ணா நகர் பகுதியில் தான் ஹோட்டல், தனியார் வணிக வளாகம், திரையரங்குகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இங்கு விளம்பர வருவாயை குறிவைத்துள்ள தொழில்கள் சூடுபிடித்து உள்ளன.அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையுடன், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கட்டுக்கடங்காத வகையில், விளம்பரப் பலககைகள், பேனர்களை வைக்கின்றன. அண்ணா நகரின் மூலை முடுக்கெல்லாம் விளம்பர பலகைகள் காட்சிய அளித்தன. இதுகுறித்து, நாளிதழில் சுட்டிக் காட்டிய பின், அண்ணா நகரில் படிப்படியாக பேனர் குறைய துவங்கியுள்ளது.தற்போது, திருமங்கலம் பகுதிகளில் அதிகரிக்க துவங்கி உள்ளது. குறிப்பாக, 100 அடி சாலையில் ஒரே இடத்தில் விளம்பர பலகைகள் அதிகளவில் உள்ளன. இதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என, மாநகராட்சியும், போலீசாரும் சரிபார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றம் வரை செல்ல அவசியம் இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை