உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொசு தொல்லை அதிகரிப்பு

கொசு தொல்லை அதிகரிப்பு

கொசு தொல்லை அதிகரிப்பு

திருவொற்றியூர் மண்டலம், பகிங்ஹாம் கால்வாய் ரயில்வே குட்டை போன்ற நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், மாலை வேளைகளில் கொசு தொல்லையால், சுற்றுவட்டார மக்கள் துாக்கம் தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள், நீர் நிலைகளில் கொசு ஒழிப்பிற்கான ஆயில் பந்துகளை போட வேண்டும். மற்றும் குடியிருப்பு பகுதிகளில், புகை மருந்து மற்றும் கொசு மருந்து உள்ளிட்டவை அடிக்க வேண்டும். இல்லாவிடில், விஷக்காய்ச்சல்கள் வேகமாக பரவும் வாய்ப்புள்ளது.--- எம்.சசிகுமார், 32, திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி