உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர் சேர்க்கை அதிகரிப்பு செம்மஞ்சேரி பள்ளிக்கு சான்று

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு செம்மஞ்சேரி பள்ளிக்கு சான்று

செம்மஞ்சேரி: கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு மாணவ - மாணவியர் சேர்க்கை அதிகரித்ததால், செம்மஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டது. செம்மஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், 900க்கும் குறைவான மாணவ - மாணவியர் படித்தனர். நடப்பு கல்வியாண்டில், 1,000 பேரை நெருங்கியது. இது, கடந்த சில ஆண்டுகளை விட அதிகம். இதற்கு காரணமான பள்ளி தலைமையாசிரியர் சக்திவேலுக்கு, தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் பள்ளி கல்வி இயக்குநர் ஆகியோர் பாராட்டு சான்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !