உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜிவ்காந்தி மருத்துவமனையில் திருட்டு அதிகரிப்பு 429 சிசிடிவி கேமரா பொருத்தி தீவிர கண்காணிப்பு

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் திருட்டு அதிகரிப்பு 429 சிசிடிவி கேமரா பொருத்தி தீவிர கண்காணிப்பு

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், 429 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கப்பட்டு வருகிறது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 44 உயர்தர சிகிச்சை துறைகள் உள்ளன. மேலும், 3,800 படுக்கை வசதிகளுடன், தினமும் புறநோயாளிகளாக மட்டும், 12,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் இருந்தும், பல்துறை உயர் சிகிச்சைக்காக பலர் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதனால், 24 மணி நேரமும் கூட்டம் மிகுந்த மருத்துவமனையாக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்கு, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்புக்காக, மருத்துவமனை வளாகத்திலேயே புற காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.ஆனாலும், இருசக்கர வாகனம் திருட்டு, குளிர்சாதன பெட்டியில் காப்பர் திருட்டு, டாக்டர், நோயாளிகளின் செயின் மற்றும் மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.இவற்றை தடுக்கும் வகையிலும், நோயாளிகள், டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பாதுகாப்பு கருதி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முழுதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தமிழக அரசு உத்தரவுப்படி டாக்டர்கள், நர்ஸ்கள், களப்பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்புக்காக, 'டவர் 1, டவர் 2, டவர் 3' ஆகிய மூன்று அடுக்குமாடி கட்டடங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், சிறப்பு பகுதி தளங்கள், இதய பிரிவு தளம், சிறுநீரக பிரிவு தளம் ஆகிய இடங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும், 429 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவை அனைத்தும், 12 கண்காணிப்பு அறைகள் வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.தொடர்ந்து, காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டிய இடத்தை தேர்வு செய்து பொருத்தி வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை