உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நேப்பியர் முகத்துவாரத்தில் துார் வாரும் பணி தீவிரம்

நேப்பியர் முகத்துவாரத்தில் துார் வாரும் பணி தீவிரம்

மெரினா, நேப்பியர் முகத்துவாரம் பகுதியில், ஆழ்துளை வரையில் துார்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் 'மிக்ஜாம்' புயலின் போது, மழைநீர் கடல் வேகமாக உள்வாங்கவில்லை. இதற்கு, முகத்துவாரத்தில் சரியான முறையில் துார்வாரப்படாததே காரணம் எனக் கூறப்பட்டது.இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே, மெரினா நேப்பியர் பகுதி முகத்துவாரம் பகுதியில், நவீன இயந்திரம் வாயிலாக, ஆழமாக துார்வாரும் பணியில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அக்கறை காட்டி வருகின்றனர்.மேலும், கடல் அரிப்பை தடுக்கும் வகையில், நட்சத்திர கற்கள் வாயிலாக துாண்டில் வளைவு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:பருவ மழைக்கு முன்னதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகத்துவாரம் பகுதியை துார்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முறையாக அவர்களின் வேலையை செய்யும் போது, வருங்காலத்தில் பருவ மழையின் போது, சென்னையில் வெள்ள நீரால் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ