உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரு நிலையங்களிலும் சரிபாதி பஸ்கள் இயக்க வேண்டும்!

இரு நிலையங்களிலும் சரிபாதி பஸ்கள் இயக்க வேண்டும்!

சென்னையின் அமைப்பு என்பது கிழக்கு பக்கம் கடலும், வடக்கு பக்கம் ஆந்திரா எல்லையையும் கொண்டது. எனவே சென்னை விரிவாக்கம் என்பது நான்கு திசைகளிலும் மேற்கொள்ள சாத்தியமில்லை.தென் சென்னை விரிவாக்கத்திற்கு சாத்தியமாக இருந்த காரணத்தால், அது காலப்போக்கில் விரிவடைந்தது. வடசென்னை, மத்திய சென்னை பகுதி மக்களுக்கு, தென் மாவட்டங்களுக்கு செல்ல 40 கி.மீ., துாரத்திற்கு புறநகர் பேருந்து நிலையம் இல்லை.ஒரு புறநகர் பேருந்து நிலையம் போதாது. வட சென்னை, மத்திய சென்னை மக்கள் பயன் பெறும் வகையில், சென்னைக்கு இரண்டு புறநகர் பேருந்து நிலையங்கள் இருப்பது தான் நியாயமானது.இதற்காக, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் சரிபாதி எண்ணிக்கையில் தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ