உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு இன்று நேர்காணல்

அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு இன்று நேர்காணல்

சென்னை, அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில், காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பொறுப்புக்கு உரிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதில் பணிபுரிய விருப்பமுள்ளோர், இன்று தாம்பரம் கோட்டம், அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம்.இப்பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயது வரை உள்ளோர் பங்கேற்கலாம்.வேலை வாய்ப்பற்றோர், இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், ஏஜன்ட்டுகள், படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளோர், கம்ப்யூட்டர் திறன் பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத்தொகை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடர்பான அசல், நகல் சான்றிதழுடன் வர வேண்டும்.தேர்வு செய்யப்படுவோர், 5,000 ரூபாய் வைப்பு தொகை மற்றும் தற்காலிக உரிமக் கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இது அரசு பணி இல்லை. கமிஷன் அடிப்படையிலானது. பயணப்படி வழங்கப்படாது என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை