மேலும் செய்திகள்
ரூ.10 லட்சம் 'ஹவாலா' பறிமுதல்
11-Nov-2024
மண்ணடி: சென்னை, வடக்கு கடற்கரை போலீசார் நேற்று முன்தினம் இரவு பாரிமுனை, ராஜாஜி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை விசாரித்தனர். அவர் வைத்திருந்த உணவு டெலிவரி பையை சோதனை செய்ததில், கட்டு கட்டாக 21 லட்ச ரூபாய் இருந்தது தெரிந்தது. விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஏலாவூரை சேர்ந்த அமனுல்லா, 34, என்பது தெரிந்தது. மலேஷிய நாட்டை சேர்ந்த ஒருவர், வங்கி கணக்கில் பணத்தை போட அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பிராட்வே, பிரகாசம் சாலையில் முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த நபரின் பையை சோதனையிட்டனர். அதில், 11.50 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணையில், பாரிமுனை, முத்துநாயக்கன் தெருவை சேர்ந்த முகமது ரிஸ்வான், 32 என்பது தெரியவந்தது. உரிய ஆணவங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இரு சம்பவங்களிலும் ஹவாலா பரிவர்த்தனைக்காக பணம் கடத்தப்பட்டதா என, விசாரிக்கப்பட்டு வருகிறது.
11-Nov-2024