உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருளுடன் இருவர் சிக்கினர்

போதை பொருளுடன் இருவர் சிக்கினர்

பேசின்பாலம்:பேசின்பாலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி பின்புறம், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை சோதனையிட்ட போது, மாவா பாக்கெட் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் பிடிபட்டவர் புளியந்தோப்பை சேர்ந்த ஜெகன், 25 என்பதும், தப்பியோடிய நவீன் என்பவர் சிவராஜ்புரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.போதைப்பொருட்களை, புளியந்தோப்பை சேர்ந்த வினோத்குமார்,35 என்பவரிடமிருந்து வாங்கிஉள்ளனர். இதையடுத்து வினோத்குமார் மற்றும் ஜெகன் ஆகியோரை பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை