உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.சி., மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஏ.சி., மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு

வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26; ஏ.சி., மெக்கானிக். அவரது மனைவி உமா மகேஸ்வரி. தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வழக்கம் போல், வீட்டை பூட்டி விட்டு இருவரும் வேலைக்கு சென்றனர்.ஆகாஷ், மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு திறக்கப்பட்டு, உள் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, இரண்டு சவரன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி பொருட்கள், 10,000 ரூபாய் பணம் திருடு போயிருந்தது.சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதி இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டை பூட்டி விட்டு, சாவியை வெளியே வைத்து விட்டு செல்வதும், இதை அறிந்த மர்ம நபர், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ