உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதரவற்றோரை மீட்க இணை கமிஷனர் வேண்டுகோள்

ஆதரவற்றோரை மீட்க இணை கமிஷனர் வேண்டுகோள்

சென்னை:சென்னை காவல் துறையால், சாலைகளில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர், பெண்கள், சிறார் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய, 'காவல் கரங்கள்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சென்னையில் வெளி மாநிலத்தவர்கள் மீட்கப்பட்டால், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பர். அவர்களின் மாவட்டத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தாருடன் பேசி, தேவையான உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.தற்போது, பண்டிகை மற்றும் மழைக்காலம் என்பதால் சாலைகள், பேருந்து நிறுத்தங்களில், ஆதரவற்ற நபர்கள் உள்ளனரா என கண்காணித்து மீட்க வேண்டும் என, இரவு நேர ரோந்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அவர்களின் அன்றாட பணி பதிவேட்டில்,'ஆதரவற்றோர் மீட்பு' என்ற பிரிவும் இணைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், தன் சமூக வலைதள பதிவில், 'காவல் கரங்கள் திட்டம் வாயிலாக, சாலைகளில் ஆதரவின்றி தவிப்போரை மீட்க, பொதுமக்கள், 94447 17100 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை