உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏழு மாதங்களில் பல்லிளித்த கருமாரியம்மன் கோவில் சாலை

ஏழு மாதங்களில் பல்லிளித்த கருமாரியம்மன் கோவில் சாலை

ஆவடி: ஆவடி மாநகராட்சி, 36 வார்டு, கருமாரி அம்மன் கோவில் பிரதான சாலையில், ஸ்ரீதேவி நகர், வேட்டைக்காரன் பாளையம் உள்ளிட்ட பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கருமாரி அம்மன் கோவில் பிரதான சாலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தார்ச்சாலை போடப்பட்டது. இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியது.இதையடுத்து, கருமாரி அம்மன் கோவில் பிரதான சாலையில், ஏழு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது இந்த, சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறி, துாசி மண்டலமாக காட்சியளிக்கிறது. அதேபோல், சாலையில் அமைக்கப்பட்டு உள்ள தேவையில்லாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் தினமும் தடுமாறி விழுந்து அவதிப்படுகின்றனர்.இது குறித்து கவுன்சிலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ