மேலும் செய்திகள்
கொங்கு பாலிடெக்னிக்கில்பணி நியமன ஆணை வழங்கல்
16-Apr-2025
ஈரோடு, அறிவியல் கல்லுாரியில், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை படித்த ஏழு மாணவர்களுக்கு, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அல்பேனியா தலைநகரான டிரானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான போஹன்வில்லே பே ரிசார்ட் அண்ட் ஸ்பாவில், வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சிறந்த ஊதியத்துடன் அங்கு செல்வதற்கு தேவையான விமான டிக்கெட், தங்குமிடம் மற்றும் உணவு அனைத்தும், நட்சத்திர ஓட்டல் நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொண்டது. பணி வாய்ப்பை பெற்ற மாணவர்களை, கல்லுாரி தாளாளர் தங்கவேல், கல்லுாரி முதல்வர் வாசுதேவன், கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் கார்த்திகேயன் வாழ்த்தினர்.மேலும் மாணவர்கள் சென்னை தாஜ் கோரமெண்டல், ஐ.டி.சி., வெல்கம் குரூப் ஹோட்டல்கள், பெங்களூரு ஓபராய் ஹோட்டலிலும் பணி வாய்ப்பை பெற்றதாக, கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
16-Apr-2025