உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றி யோசிக்க பழகுவோம்; பாடங்களை புரிந்து படிப்போம்! மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆலோசனை வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடை

மாற்றி யோசிக்க பழகுவோம்; பாடங்களை புரிந்து படிப்போம்! மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி ஆலோசனை வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடை

சென்னை: ''மாணவர்கள் பாடங்களை படிப்பது மட்டுமின்றி, மாற்றி யோசித்து, சிக்கலான அம்சங்களை எளிதில் தீர்க்கும் வகையில், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பின், வினாடி - வினா விருது இறுதி போட்டியில், தலைமை விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:தினமும் ஒரு மலர் பூக்கிறது என்றால், அது 'தினமலர்' தான். இந்த நாளிதழ், மாணவர்களின் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை, ஆண்டு முழுதும் நடத்துகிறது. பட்டம் மாணவர் பதிப்பு போட்டிகளும், மாணவர்களின் வெற்றிக்கான நிகழ்ச்சியாகும்.எங்கள் ஐ.ஐ.டி.,யில், வரும் கல்வி ஆண்டு முதல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அறிமுகமாகிறது. இளநிலை பட்டப்படிப்பில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாணவி உட்பட தலா, 2 பேருக்கு இடம் ஒதுக்க உள்ளோம். எங்கள் ஐ.ஐ.டி., மாணவரும், ஒலிம்பிக் போட்டியில் விருது பெற வேண்டும் என்பது எங்கள் கனவாகும். அது, மாணவர்களான உங்களால் மட்டுமே நடக்கும்.எந்த ஒரு போட்டியிலும், போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற, குறிப்பிட்ட நேரத்தில், சரியான பதிலை தெரிவிக்க வேண்டியதும், பாடங்களை புரிந்து படிப்பதும் முக்கியம். இதற்காக, ஐ.ஐ.டி.,யில், 'அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்' என்ற ஆன்லைன் படிப்பு இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர்ந்தால், மாற்றி யோசித்து, சிக்கலான அம்சங்களை எளிதில் தீர்க்கும் வகையில், பாடங்களை படிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் பி.ஸ்ரீராம் பேசியதாவது:'தினமலர்' நாளிதழ் எப்போதும் மாணவர் நலன் சார்ந்த ஊடகமாக செயல்படுகிறது. தற்போதைய காலத்தில், தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, வெளிநாடுகளுக்கு இணையான தொழில்நுட்பத்தை இந்தியாவில் ஏற்படுத்த, பிரதமர் மோடி திட்டங்கள் வகுத்துள்ளார்.இந்தியா வல்லரசாக மாற, நம் நாடு, அறிவுசார் நாடுகளில் முன்னணியில் இடம் பெற வேண்டும். இதற்கு நாம் தொழில்நுட்ப ஆராய்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அந்த படிப்புகளில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். கல்வி தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.- ஆர்.தேன்மொழி,முதல் இடம் பிடித்த தேவஸ்ரீயின் தாய்.- டி. செந்தில்குமார்,ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ராமாபுரம்.- ஜி. சந்திரிகா, ஆசிரியை, சுதந்திரா மெட்ரிக் பள்ளி, திருத்தணி.- எம்.யாகினி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி,ராமாபுரம்.- எஸ்.அபிராமி, வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவி, அயப்பாக்கம்.

. போட்டிக்காக, தினமும் இரண்டு மணி நேரம் பட்டம் படித்தோம். நாங்கள் கடந்த ஆண்டு போட்டியில், 4ம் இடம் பிடித்தோம். இந்த ஆண்டு, இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இடம் பிடிப்போம்.

- இரண்டாம் பரிசு பெற்ற, மாடம்பாக்கம் சீயோன் பள்ளி மாணவர்கள் த.ஹரிஷ் மற்றும் வெ.மா.சாரதி.கடந்த ஆண்டு அரங்கில் இருந்தவர்களிடம் கேட்ட கேள்விக்கு பரிசு பெற்றோம். இந்த ஆண்டு, 3ம் பரிசுக்கு முன்னேறியுள்ளோம். பட்டம் இதழ் படிக்கும் போது நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். பட்டத்தில் உள்ள பணம் பத்தும் செய்யும் பிரிவில்,பொருளாதாரம் குறித்தும் எளிதாக தெரிந்து கொண்டோம்.- மூன்றாம் பரிசு பெற்ற தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மாணவர் ஏ.வி., ஸ்ரீவத்ஸா, மாணவி ஜி.வி. ஸ்ரீரக் ஷா வினுதா.நான் மதுராந்தகம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளேன். நான் சிவில் சர்வீசஸ் தேர்வை நான்கு முறை எழுதியும் கிடைக்கவில்லை. எனக்கு எட்டாத கனி, என் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என, சின்ன வயதில் இருந்தே பயிற்சி அளித்து வருகிறேன். என் மகள் முதல் பரிசு பெற்றிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.- பி.மணிமாறன், முதல் பரிசு பெற்ற அணி மாணவி, கவின்மதியின் தந்தை. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். அதேபோல், எங்கள் பிள்ளைகள், மிக தீவிரமாக படித்து வெற்றி பெற்றுள்ளனர். என் மகள் மட்டுமின்றி, நானும் பட்டம் இதழ் படித்து வருகிறேன். பல தகவல்களை அதன் வாயிலாக அறிந்துக் கொள்கிறேன். மாணவர்களின் வெற்றிப்படிகளுக்கு இது மிகப் பெரிய மேடையாக உள்ளது. தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பாட புத்தகத்தை தாண்டி ஒரு உலகம் உள்ளதையும், அதை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பையும் பட்டம் இதழ் மாணவர்களுக்கு அளிக்கிறது. ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ள பட்டம் உதவியாக உள்ளது.எனக்கு வரலாறு படிப்பதில் அதிக ஆர்வம் இல்லை. பட்டம் படிக்க துவங்கியதில் இருந்து வரலாறும் படிக்க துவங்கியுள்ளேன். முதல் முறையாக இதேபோன்ற போட்டியில் பங்கேற்றுள்ளேன். எனக்கு தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகம் வரும். இதனால், மதிப்பெண் குறைந்தது. பட்டம் படிக்க துவங்கியதில் இருந்து தமிழில் எழுத்து பிழை இன்றி எழுத கற்றுக் கொண்டேன்.- எஸ். சான்வி,சுதந்திரா மெட்ரிக் பள்ளி மாணவி, திருத்தணி.

பட்டத்தில் அறிவியல் சார்ந்த பகுதி எனக்கு மிகவும் பிடிக்கும்.

-ம.கவின்மதி, ர.தேவஸ்ரீ,முதல் பரிசு பெற்ற மாணவியர், ஸ்ரீ சங்கர வித்யாலயா ஊரப்பாக்கம்.

இந்த வெற்றிக்கு, எங்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை