உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குடிநீர் குழாயில் மோதி கவிழ்ந்த சொகுசு கார்

 குடிநீர் குழாயில் மோதி கவிழ்ந்த சொகுசு கார்

சென்னை: ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலையோர குடிநீர் குழாயில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி, 55. இவர் நேற்று மாலை, தேனாம்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை வழியாக, 'டொயோட்டா இனோவா கிரிஸ்டா' சொகுசு காரை ஓட்டிச் சென்றார். செம்மொழி பூங்கா அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் இருந்த குடிநீர் இரும்பு குழாயில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகிலிருந்தோர் காரை நிமிர்த்தி, விபத்தில் ரஞ்சனியை மீட்டனர். சம்பவம் அறிந்து வந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்குள்ளா ன காரை அப்புறப்படுத்தினர். மேலும் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரஞ்சனி 'சீட் பெல்ட்' அணிந்து இ ருந்ததால், சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்