உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் ஊழியரை தாக்கியவர் கைது

பெண் ஊழியரை தாக்கியவர் கைது

ஆதம்பாக்கம் :நங்கநல்லுார், ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி, 45. இவர், அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 13ம் தேதி, அவர் பணியில் இருந்தபோது, கடை உரிமையாளரின் கணவர் முத்துக்குமார், 52, ஆரோக்கியமேரி உட்பட மூன்று பேரை, கடையை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார்.ஆரோக்கியமேரி வெளியே செல்ல தாமதம் ஆனதால், அவரை தாக்கி வெளியேற்றிய முத்துக்குமார், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஆரோக்கியமேரியை தாக்கி, தகாத வார்த்தைகளில் பேசியது உறுதியானது.இதையடுத்து, ஆதம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரை சேர்ந்த முத்துக்குமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி