மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
02-Jun-2025
மனைவியின் துரோகத்தால் மனமுடைந்த கணவன் மாயம்
08-Jun-2025
சென்னை:முதியவரை கல்லால் தாக்கிய, போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.தேனாம்பேட்டை, ராமலிங்கேஷ்வர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், 60. இவரது மகன் ராமு, 24. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிரியமதன், 27, என்பவர், கடந்த 25ம் தேதி இரவு, மது போதையில் வீண் தகராறில் ஈடுபட்டார்.அப்போது மனோகரன், சண்டையை விலக்கி பிரியமதனை சமாதானப்படுத்தினார். இதில் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து, மனோகரன் மீது வீசி தாக்கியது மட்டுமல்லாமல், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.காயமடைந்த மனோகரன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரை விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், பிரியமதனை நேற்று கைது செய்தனர்.
02-Jun-2025
08-Jun-2025