மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வாலிபரிடம் விசாரணை
29-Jun-2025
நொளம்பூர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, மயக்க மருந்து கொடுத்து, இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.திருமங்கலம் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும், 24 வயது இளம்பெண், ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஜித், 31, என்பவருடன், இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டிய அஜித்தை நம்பி, அவருடன் வெளியே சென்ற இளம்பெண்ணிற்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அதை வீடியோவாகவும் அஜித் பதிவு செய்துள்ளார்.இந்நிலையில், அஜித்துக்கு ஏற்கனவே திருமணமாதை அறிந்த இளம்பெண், அவரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, தனிமையில் இருந்த வீடியோவை காட்டி, இளம்பெண்ணை மிரட்டி, அடிக்கடி பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், திருமங்கலம் மகளிர் போலீசில், இரண்டு நாட்களுக்கு முன் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிந்து விசாரித்த மகளிர் போலீசார், அஜித்தை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
29-Jun-2025