உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆன்லைனில் மோசடி ஊரப்பாக்கம் நபர் கைது

ஆன்லைனில் மோசடி ஊரப்பாக்கம் நபர் கைது

ஆவடி, ஆவடி அடுத்த அம்பத்துாரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 47; தனியார் வங்கி ஊழியர். இவர், சமூக வலைதளத்தில் வந்த பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட 'வாட்ஸாப்' எண் மற்றும் டெலிகிராமில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், 'பிட் காயின் டிரேடிங்' என்ற பெயரில், பாலமுருகனுக்கு ஆன்லைன் கணக்கை துவக்கியுள்ளனர். அதில், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, 55.38 லட்சம் ரூபாயை பாலமுருகன் முதலீடு செய்துள்ளார். ஆனால், பாலமுருகனுக்கு பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர்.புகார்படி, ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த டோமினிக், 27, என்பவர் சிக்கினார். விசாரணையில், டில்லியில் உள்ள கும்பலால், டோமினிக் மோசடியில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்தது. டோமினிக்கை கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்; மோசடி கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ