உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது சாலையில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு வலை

பொது சாலையில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு வலை

வியாசர்பாடி: டியூஷனுக்கு செல்லும் வழியில், சிறுமியிடம் அத்துமீறிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கொடுங்கையூரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக, கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் சென்று வருகிறார். நேற்று முன்தினம் டியூஷன் செல்லும்போது மர்ம நபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி பயந்து தப்பியோட, மர்ம நபர் பின் தொடர்ந்து சென்று, மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரை அடுத்து, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை