போலீசுக்கு தண்ணி காட்டியவர் கைது
குமரன் நகர்,சைதாப்பேட்டை, காரணி தோட்டம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. இவர், கடந்த 2013ம் ஆண்டு, ஆறு பேர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு குறித்து, குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். இதில் தொடர்புடைய, கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந்த குற்றவாளிகளில் ஒருவரான தீபன், 35, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமினில் வெளியே வந்த தீபன், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், தீபனை கைது செய்து ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.இதையடுத்து, தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், குமரன் நகர் போலீசாரால் நேற்று தீபன் கைது செய்யப்பட்டார்.