உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒடிசாவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவர் கைது

ஒடிசாவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவர் கைது

அண்ணா நகர், ஒடிசாவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் வெளியில் வந்த வாலிபரை, போலீசார் பின்தொடர்ந்து கண்காணித்தனர். அந்த வாலிபர், பெரிய பார்சலுடன் மாநகர பேருந்தில் ஏறி, கோயம்பேடு, காளியம்மாள் தெருவில் இறங்கினார். அப்போது போலீசார் அவரை மடக்கிபிடித்து சோதித்த போது, 10.500 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷான், 24, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி, கேரளாவில் விற்க முயன்றதும் தெரிந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ