உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் போன் திருடியவர் கைது

ரயிலில் போன் திருடியவர் கைது

தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பிளாட்பாரம் - 2ல், நேற்று முன்தினம், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.அதில், பெருங்களத்துார், சதானந்தபுரத்தை சேர்ந்த குமார் என்கிற குமாரசாமி, 55, என்பது தெரியவந்தது.அவரிடம் இருந்த, 5 மொபைல் போன்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவை திருடப்பட்ட மொபைல் போன்கள் என்பது தெரியவந்தது.ரயிலில் பயணியரோடு பயணியாக பயணம் செய்யும் குமாரசாமி, மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, குமாரசாமியை கைது செய்த ரயில்வே போலீசார், அவரிடம் இருந்த ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி