உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கியில் மூதாட்டியிடம் ரூ.17,500 திருடியவர் கைது

வங்கியில் மூதாட்டியிடம் ரூ.17,500 திருடியவர் கைது

ராயபுரம், வங்கியில், மூதாட்டி யின் கவனத்தை திசை திருப்பி, 17,500 ரூபாயை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப் பேட்டை, நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் பேபி, 74. இவர் நேற்று ராயபுரம், எம்.எஸ்., கோவில் தெருவில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்றார். கணவர் ஜான்சனின் மாதாந்திர ஓய்வூதியத்தை எடுத்துவிட்டு, சிறிது நேரம் வங்கியில் ஓய்வு எடுத்தார். அருகில் வந்து அமர்ந்த ஆசாமி, மூதாட்டி பேபியிடம் பேச்சு கொடுத்து, அவரது பையில் இருந்த, 17,500 ரூபாயை திருடி சென்றார். இதுகுறித்து, ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மூதாட்டியிடம் கைவரிசைகாட்டிய, வடபழனி ராகவன் முதல் தெருவை சேர்ந்த சிவகுமார், 47, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை