உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழக்கை திரும்ப பெற மிரட்டல் விடுத்தவர் கைது

வழக்கை திரும்ப பெற மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர், 32; தனியார் தொலைக்காட்சி ஊழியர். இவரது அக்கா மகன் தனுஷிடம், கடந்த ஏப்., 25ம் தேதி கத்திமுனையில் மர்மநபர் மொபைல் போன் மற்றும் தங்க செயினை பறித்துச் சென்றார்.திவாகர், தனுஷை அழைத்துச் சென்று, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட சூர்யா, 19, என்பவரை கைது செய்தனர்.சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த சூர்யா, நேற்று முன்தினம் மயிலாப்பூர் மாங்கொல்லை அருகே நடந்து சென்ற திவாகரை வழிமறித்து, புகாரை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையெல் கொலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.இது தொடர்பாக திவாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மிரட்டல் விடுத்த மயிலாப்பூரைச் சேர்ந்த சூர்யா, 19, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை