உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைனான்ஸ் நிறுவனத்தில் கையாடல்: இருவர் கைது

பைனான்ஸ் நிறுவனத்தில் கையாடல்: இருவர் கைது

கோட்டூர்புரம், கோட்டூர்புரம், ரஞ்சித் சாலை பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், நேற்று முன்தினம், கோட்டூர்புரம் போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.அதில், நிறுவனத்தின் கணக்கை சரிபார்த்த போது, 15 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரிந்தது.இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.போலீசாரின் விசாரணையில், பள்ளிக்கரணையைச் சேர்ந்த பைனான்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் யுவன் சங்கர், 23, என்பவர், பணத்தை கையாடல் செய்து, அவரது வங்கி கணக்கில் செலுத்தியது தெரிந்தது. அவரது பெண் தோழியான, பள்ளிக்கரணையைச் சேர்ந்த சிந்து, 21, என்பவரின் வங்கி கணக்கிலும், கையாடல் பணத்தை செலுத்தியுள்ளது தெரிந்தது. இதையடுத்து நேற்று, யுவன் சங்கர் மற்றும் சிந்து ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ