உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பையில் சாமந்தி பூக்கள்

குப்பையில் சாமந்தி பூக்கள்

கோயம்பேடு:கோயம்பேடு பூ சந்தையில், சாமந்தி பூக்கள் விற்பனையின்றி தேங்கி அழுகியதால், டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டன. கோயம்பேடு சந்தைக்கு, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் பூக்கள் வருகின்றன. பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் இல்லாத நிலையில், பூக்கள் வரத்து அதிகமாக உள்ளதால், விற்பனை குறைந்து, விலை சரிந்துள்ளது. கிலோ, 10 - 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருந்தும் விற்பனை இன்றி தேங்கி, அழுகி வீணாகின்றன. இதனால், டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டன. மேலும், 1 கிலோ முல்லை - 200 ரூபாய்க்கும், மல்லிகை- 450 ரூபாய்க்கும் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை