உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதுமைப்பெண் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு

புதுமைப்பெண் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு

ஆவடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் 'புதுமைப்பெண்' திட்ட விரிவாக்கத்தை, துாத்துக்குடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு, ஆவடி அடுத்த பட்டாபிராம் தனியார் கல்லுாரியில் அமைச்சர் நாசர் தலைமையில் விழா நேற்று நடந்தது.'புதுப்பெண்' திட்டத்தின் கீழ், மாணவ - மாணவியர் மாதந்தோறும் 1,000 ரூபாய் எடுத்து பயனுறும் வகையில், வங்கி பற்று அட்டையை அமைச்சர் நாசர் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில், 2024 - 25ம் நிதியாண்டில் 8,571 மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ், திருவள்ளூரில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8,189 மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மேலும் 360 மாணவியருக்கு வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைச்சர்நாசர் பேசுகையில், ''மாதந்தோறும்,17,120 மாணவ - மாணவியருக்கு 1,000 ரூபாய் வழங்குவதற்காக, தமிழக அரசு 1.71 கோடி ரூபாய் செலவு செய்கிறது. ''மாணவர்கள் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக முதல்வர் தொலைநோக்கு பார்வை வாயிலாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதனால், மாணவ - மாணவியர் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,'' என்றார்.நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை