உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துணை மின் நிலையத்திற்கு சென்னையில் இட பற்றாக்குறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளிப்படை

துணை மின் நிலையத்திற்கு சென்னையில் இட பற்றாக்குறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளிப்படை

சென்னை, ''சென்னை மாநகராட்சியில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு இடபற்றாக்குறை உள்ளது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - சுந்தர்: உத்திரமேரூர் தொகுதி, குன்னவாக்கத்திற்கு, நெல்வாய் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்றுவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்னவாக்கத்திற்கு, பிரிவு அலுவலகம் அமைத்து தரவேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி: குன்னவாக்கம் புதிய பிரிவு அலுவலகம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு, அங்கு மின் இணைப்பு எண்ணிக்கையில் அடிப்படையில், முன்னுரிமை அளிக்கப்படும். தி.மு.க.,-தாயகம் கவி: திரு.வி.க., நகர் தொகுதியில் பெரம்பூர் நெடுஞ்சாலையில், 33 கே.வி., புதிய துணை மின்நிலையம் அமைத்து தரவேண்டும்.அமைச்சர் செந்தில்பாலாஜி: சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, துணைமின்நிலையம் அமைக்க இடப்பற்றாக்குறை உள்ளது. அந்த இடத்தில் எவ்வளவு மின்தேவை உள்ளது; கூடுதல் இணைப்புகள் எவ்வளவு வந்துள்ளது என்பது ஆய்வு செய்து, தேவை ஏற்படும்பட்சத்தில் துணை மின்நிலையம் அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை