உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு 

மாதவரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு 

மாதவரம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால், தமிழக அரசின் சார்பில், பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கரன், நிருபர்களிடம் கூறியதாவது:கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது போல, மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும், தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி