உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காணாமல் போன சிறுவன் 3 மணி நேரத்தில் மீட்பு

காணாமல் போன சிறுவன் 3 மணி நேரத்தில் மீட்பு

அம்பத்துார், அம்பத்துார், மண்ணூர்பேட்டையில் வசிக்கும் ஒடிசா தம்பதியின் மகன் மிதுன் ஜாய், 9. மனவளர்ச்சி குன்றிய இச்சிறுவன். நேற்று காலை 8:00 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருக்கும்போது காணாமல் போனான்.புகாரின்படி, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் சிறுவனை தேடினர். அதே சமயம், அம்பத்துார் மாநகர போக்குவரத்து பணிமனையில், மனவளர்ச்சி குன்றிய நிலையில் சிறுவன் தனியாக இருப்பதாகவும், ஹிந்தியில் பேசுவதாகவும் முற்பகல் 11:00 மணியளவில் தகவல் கிடைத்தது. போலீசார், அது காணாமல் போன மிதுன் ஜாய் என்பதை உறுதி செய்த பின், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை