உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவிக்கு எம்.எல்.ஏ., உதவிக்கரம்

மாணவிக்கு எம்.எல்.ஏ., உதவிக்கரம்

திருவொற்றியூர், மாத்துார் எம்.எம்.டி.ஏ., பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா கவிநயா, 14. சிறுவயது முதல் கிக்பாக்சிங் பயிற்சி பெற்று விளையாடி வருகிறார். சர்வதேச போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இதுவரை, ஒன்பது தங்கப் பதக்கம் வென்றுள்ள அபர்ணா கவிநயா, கம்போடியாவில், கடந்த 26ம் தேதி நடைபெற்ற போட்டியில், தங்கம் வென்றார். தாய்லாந்தில் மார்ச் மாதம் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கிறார். இதில் பங்கேற்கும் வகையில், மாணவிக்கு 30,000 ரூபாய் வழங்கி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி சங்கர் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ