மாணவியின் படிப்பிற்கு எம்.எல்.ஏ., உதவிகரம்
திருவொற்றியூர், எண்ணுார், தாழங்குப்பம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்; சலவை தொழிலாளி. இவரது மகள் பிளஸ் 2 தேர்வில், 549 மதிப்பெண் பெற்றார். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு, கவரைப்பேட்டை, ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரியில், எம்.ஐ.எம்.எல்., பாடப்பிரிவில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. கல்வி கட்டணமாக, 1.70 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. அதை கட்ட முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கரிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவியின் நிலையறிந்து, கல்வி கட்டணமான 1.70 லட்சம் ரூபாயையும் எம்.எல்.ஏ., வழங்கினார்.