திருவொற்றியூர்: உதயநிதி பிறந்த நாளில், 3,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு, நலத்திட்ட உதவிகளை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் வழங்கினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை, தி.மு.க.,வினர் தமிழகம் முழுதும் நேற்று கொண்டாடினர். அதன்படி, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் ஏற்பாட்டில், மூன்று இடங்களில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி, திருவொற்றியூர் - சத்தியமூர்த்தி நகர், விம்கோ நகர், கே.வி.கே. குப்பம் ஆகிய மூன்று பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்டோருக்கு, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.ஏ., சங்கர் வழங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன், வட்ட செயலர் சொக்கலிங்கம், கவுன்சிலர் தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.