சென்னை: 'சென்னை ஒன்' செயலி வாயிலாக, மாதாந்திர மாநகர 'பஸ் பாஸ்' பெறும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்து சேவையை பயன்படுத்துவோர், ஒரே டிக்கெட்டில் பயணிக்க வசதியாக, 'சென்னை ஒன்' என்ற செயலி செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை, 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகம், 1,000, 2,000 ரூபாய் பாஸ்கள், மின்னணு அட்டை வடிவில் பெறும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று துவக்கிவைத்தார். 'நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நக ரம்' என்ற தேசிய விருது பெற்றமைக்கு, மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கினார். பின், அமைச்சர் சிவசங்கர் பேசுகையி ல், ''நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரு நகரங் கள் இருக்கின்றன. ஆனால், சென்னையில் இருப் பது போல், அனைத்து பகுதிகளை இணைக்கும் வகையில், பொது போக்குவரத்து வசதி இல்லை . மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் சிற்றுந்துகளை கொண்டு வருவதற்கான பணி கள் நடந்து வருகின்றன,'' என்றார்.