உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில்  தாய் தற்கொலை

மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில்  தாய் தற்கொலை

பெரம்பூர், பெரம்பூர் அருகே காமராஜ் நகர் பட்டினத்தார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 53. இவரது மனைவி தீபா ராணி, 43. இவர்களுக்கு ரோகித், 25, என்ற மகன் உள்ளார். அடுத்தவாரம் ரோகித்துக்கு நிச்சயதார்த்தம் நடத்த தேதி முடிவு செய்திருந்தனர்.'ஏசி' விற்பனை கடை நடத்தி வரும் செல்வமும், அவரது மகனும், நேற்று காலை வழக்கம்போல தங்களின் கடைக்கு சென்றுவிட்டனர்.மதிய உணவுக்காக ரோகித் வீட்டிற்கு வந்தபோது, தாய் தீபாராணி வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !