மேலும் செய்திகள்
ஹிந்து மகா சபா தலைவர் 'போக்சோ'வில் கைது
15-Oct-2025
அம்பத்துார்: அம்பத்துார் காவல் சரக்கத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, தன் முதல் கணவரை பிரிந்து, மூர்த்தி, 42, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் இரண்டாவது கணவர் மூர்த்தி, முதல் கணவருக்கு பிறந்த 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார். அதன்படி, மகளிர் போலீசார் மூர்த்தியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மகளிர் போலீசார் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
15-Oct-2025