உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஆர்.எப்., கழிவுநீரை வெளியேற்ற இணைப்பு கொடுத்ததா மாநகராட்சி?

எம்.ஆர்.எப்., கழிவுநீரை வெளியேற்ற இணைப்பு கொடுத்ததா மாநகராட்சி?

திருவொற்றியூர்,:'எம்.ஆர்.எப்., நிறுவனம் கழிவுநீர் வெளியேற்ற, மாநகராட்சி இணைப்பு ஏதும் தரவில்லை. அந்நிறுவனம் கழிவுநீரையோ, தேங்கும் தண்ணீரையோ அனுமதியின்றி வெளியேற்ற முடியாது' என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.சென்னை, திருவொற்றியூர் - விம்கோ நகரில், டயர் உற்பத்தி செய்யும் எம்.ஆர்.எப்., தொழிற்சாலை உள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு வாயில், டி.எச்.சாலை - விம்கோ நகர் பக்கமும்; மற்றொரு வாயில், எண்ணுார் விரைவு சாலை - பலகை தொட்டி குப்பம் பக்கமும் உள்ளது.எண்ணுார் விரைவு சாலை வாயிலில் இருந்து, நிறுவனத்தின் ரசாயன கழிவுகள், வாய்க்கால் வழியாக, மழைநீர் வடிகாலில் கலக்க செய்வதாக புகார் எழுந்தது. நிறுவன வாய்க்காலும், மாநகராட்சியின் மழைநீர் வடிகாலும் இணையும் இடத்தில், புதிதாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கழிவுநீர் வெளியேற்ற மாநகராட்சி இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால், மழைநீர் வடிகாலுடன் இணைக்கப்படவில்லை. வடிகால் மூடிகள் உடைவதால், சாய்வு தளம் அமைக்க அறிவுறுத்தினோம். அதன்படியே, எம்.ஆர்.எப்., நிறுவனம் சாய்வு தளம் அமைத்துள்ளது. மாறாக, நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், வாயில் அருகே தேக்கி வைக்க மதகு அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் அதிகரிக்கும் பட்சத்தில், நிறுவன வாயில் அருகே இருக்கும் தொட்டியில் இருந்து, மின்மோட்டர் வாயிலாக தண்ணீர் வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்போது, ரசாயன கலப்பு இருந்தால் நிச்சயம் தெரிந்து விடும். எம்.ஆர்.எப்., நிறுவனம், மாநகராட்சி அனுமதியின்றி தண்ணீரை வெளியேற்ற முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை