உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முருகா... முருகா... நின்னடி! ஞானத் திருப்பாடல் வெளியீட்டு விழா

முருகா... முருகா... நின்னடி! ஞானத் திருப்பாடல் வெளியீட்டு விழா

சென்னை : 'முருகா... முருகா... நின்னடி!' ஞானத்திருப்பாடல் வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் டாக்டர் சுவாமி பத்மேந்திரா இயற்றி அருளிய, 'முருகா... முருகா... நின்னடி!' ஞானத் திருப்பாடல் வெளியீட்டு விழா, திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகளின் திருக்கோவில் மண்டபத்தில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இப்பாடலுக்கு, திரைப்பட பின்னணி பாடகர் டாக்டர் பிரபாகர் இசைஅமைத்துள்ளார். தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் டாக்டர் சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்குகிறார். அமைச்சர் சேகர்பாபு பாடலை வெளியிட, தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, சென்னை முன்னாள் மாவட்ட நீதிபதிகள் முருகேசன் மற்றும் வெங்கடேசன் பெற்றுக் கொள்கின்றனர். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் திருமலைமுத்து, 'பொனிக்ஸ் மெலடிஸ் டிவோஷனல் சாங்ஸ்' எனும் 'யுடியூப்' பக்கத்தில் பாடல் ஒளிபரப்பை துவக்கி வைக்கிறார். சென்னை காவல் துறை மாநில குற்ற ஆவண காப்பகம் தலைவர் ஜெயஸ்ரீ மற்றும் சென்னை மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் கோபி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். விழா, வேலுார் மாவட்ட முன்னாள் கலெக்டர் முருகு கவி ராஜேந்திரன் தலைமையில், சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன், சென்னை சாய் சமர்ப்பண அறக்கட்டளை நிறுவனர் ஜெகத் ராம்ஜி, நங்கநல்லுார் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சன்மார்க்க சூப்பர் சிங்கர் காருண்யா இறை வணக்கம் பாட உள்ளார். வள்ளலார் பேரவை மாநில செயலர் டாக்டர் மகேஷ் வரவேற்கிறார். சிதம்பரம் கல்வியியல் புலம் அண்ணாமலை பல்கலை புலமுதன்மையார் பேராசிரியர் அம்பேத்கர், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் ரவி பாபு, புவனகிரி உலகப்புகழ் வர்ம கலை சிகிச்சை வல்லுநர் டாக்டர் சீனிவாசன், டாக்டர் வளர்மதி, டாக்டர் வடிவேல் முருகன், ஏ.கே.பி.சரவணன், சிவா மற்றும் பிரீமியர் ரேடியோ சுஜித் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 'தபஸ்யா' நடனப்பள்ளி குரு டாக்டர் ரத்தனமாலா சரவணனின் மாணவியரின் பரதநாட்டியம் நடக்கிறது. 'குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி' ஒருங்கிணைப்பாளர் மதன் நன்றியுரை, நாடக ஆசிரியர் இயக்குநர் 'கலைமாமணி' சந்திரமோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சென்னை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவர் செந்நெறி தண்டபாணி, வணக்கம் தமிழகம் நிறுவனர் தில்லை கார்த்தி, மாநில வள்ளலார் பேரவை அன்பர்கள் மற்றும் திருக்கோவில் அன்பர்கள் விழா ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !