உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மர்மமான முறையில் தீக்கிரையான கார்கள்

மர்மமான முறையில் தீக்கிரையான கார்கள்

மாம்பலம், தி.நகர், அழகி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கீர்த்திவர்மன், 38; மருத்துவர். வேதம்மாள் தெருவைச் சேர்ந்தவர் நவீன், 26.இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, தி.நகர் தெற்கு மேற்கு போக் சாலையில் உள்ள வீடியோ கேம் விளையாடும் நிறுவனத்திற்கு காரில் சென்றனர்.கீர்த்திவர்மன் 'ஹூண்டாய் ஐ20' காரிலும், நவீன் 'மாருதி இக்னிஸ்' காரிலும் சென்றனர். இந்த நிலையில், கார்கள் தீப்பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து, தி.நகர் மற்றும் அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி