உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய கூடைப்பந்து துவக்கம் 100 பல்கலைகள் பலப்பரீட்சை

 தேசிய கூடைப்பந்து துவக்கம் 100 பல்கலைகள் பலப்பரீட்சை

சென்னை: காட்டாங்கொளத்துாரில் நேற்று துவங்கிய, தேசிய பல்கலைகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், 100 பல்கலைகள் பங்கேற்று உள்ளன. அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று காலை துவங்கியது. இதில், நாடு முழுதும் இருந்து, 100 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. காலை நடந்த முதல் நாள் போட்டியில், ராமச்சந்திரா பல்கலை, 77 - 18 என்ற புள்ளி கணக்கில், கர்நாடகாவின் பாகல்கோட் பல்கலையையும், ஆந்திராவின் அப்துல் கலாம் பல்கலை, 79 - 22 என்ற புள்ளி கணக்கில், ஆந்திராவின் விக்ரம சிம்ஹபுரி பல்கலையையும் வீழ்த்தின. தெலுங்கானாவின் உஸ்மானியா பல்கலை, 44 - 35 என்ற புள்ளிக்கணக்கில் தமிழகத்தின் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலையையும், கேரளா வேளாண் பல்கலை, 40 - 35 என்ற புள்ளி கணக்கில் அழகப்பா பல்கலையையும் வீழ்த்தின. வேலுார் வி.ஐ.டி., பல்கலை 44 - 41 என்ற புள்ளிக்கணக்கில் கேரளா சுகாதார அறிவியல் பல்கலையையும், மங்களூரு பல்கலை 54 - 17 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவின் எஸ். ஆர்., பல்கலையையும் தோற்கடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்