மேலும் செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி: ஆவடி போலீஸ் அசத்தல்
30-Jul-2025
அதிரடி Half century Rishabh pant அசத்தல்
25-Jul-2025
சென்னை, தேசிய அளவில் சப் - ஜூனியருக்கான குத்துச்சண்டை போட்டியில், மூன்று தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என, 12 பதக்கங்கள் வென்று, தமிழக அணி அசத்தியது. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில், நான்காவது தேசிய சப் - ஜூனியர் குத்துச்சண்டை போட்டி, உத்தர பிரதேசம் மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்தது. இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் தமிழகம் சார்பில், சிறுவர்களில் 30 - 33 கிலோ பிரிவில் சந்தோஷ்; 35 - 37 கிலோ பிரிவில் ஒப்ரைட் மெக்கேட்ஸ் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். மேலும், 43 - 46 கிலோ பிரிவில் தர்ஷன் வெள்ளி பதக்கம் வென்றார். 49 - 52 கிலோ பிரிவில் விக்னேஷ்வரன்; 52 - 55 பிரிவில் சக்தி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர். சிறுமியரில் 70 கிலோவிற்கு மேல் உள்ள பிரிவில் மோன்ஷிஹா தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும், 33 - 35 கிலோ பிரிவில் காவியா; 37 - 40 கிலோ பிரிவில் சாரா தமிழ்; 58 - 61 கிலோ பிரிவில் சுவாதிகா மற்றும் 67 - 70 கிலோ பிரிவில் பானு ஸ்ரீமதி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினர். அதுமட்டுமல்லாமல், 61 - 64 கிலோ பிரிவில் ஹேமாவதி; 49 - 52 கிலோ பிரிவில் ஹர்ஷிதா ஆகியோர் வெண் கலம் வென்று அசத்தினர்.
30-Jul-2025
25-Jul-2025