உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய பல்கலை வாலிபால்: எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

 தேசிய பல்கலை வாலிபால்: எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

சென்னை: தேசிய பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டியில், எஸ். ஆர்.எம்., பல்கலை சாம்பியன் கோப்பையை வென்றது. இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவில், தேசிய பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டி, செங்கல்பட்டு, காட்டாங்கொ ளத்துாரில் நேற்று முன்தினம் நிறை வடைந்தது. முதல் அரை இறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 20, 25 - 13, 19 - 25, 25 - 11 என்ற செட் கணக்கில், லவ்லி புரொபஷனல் பல்கலையை தோற்கடித்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதி யில், புவனேஸ்வர் கே.ஐ. ஐ.டி., 25 - 21, 25 - 23, 26 - 28, 25 - 23 என்ற செட் கணக்கில், கோட்டாயம் எம்.ஜி., பல்கலை அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பி யன் எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் கே.ஐ.ஐ.டி., பல்கலை அணிகள் எதிர்கொண்டன. அதில், 27 - 25, 25 - 22, 23 - 25, 25 - 08 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் கோப்பையை தக்க வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை