உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எலும்பு அறுவை சிகிச்சைக்கு புதிதாக ஓ - ஏஆர்எம் சாதனம்

எலும்பு அறுவை சிகிச்சைக்கு புதிதாக ஓ - ஏஆர்எம் சாதனம்

சென்னை:சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், மூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவை சிகிச்சைகளுக்கான, 'நேவிகேஷன் சிஸ்டம்' உடன் கூடிய, 'ஓ - ஏஆர்எம்' சாதனத்தை, 'இஸ்ரோ' தலைவர் நாராயணன், இரு நாட்களுக்கு முன் துவக்கி வைத்தார்.செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் '2டி, 3டி இமேஜிங்' வழியாக இயங்கும் இச்சாதனம், மிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும், மூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவை சிகிச்சையை திறம்பட மேற்கொள்ளவும், மருத்துவ நிபுணர்களுக்கு உதவுகிறது.இதுகுறித்து, மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:நோயாளிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், இச்சாதனம், நவீன தொழில்நுட்பங்களுடன் இருக்கிறது.இவை, நோயாளிகளுக்கு ஏற்படும் இடர்வாய்ப்புகளை குறைப்பதுடன், அறுவை சிகிச்சைக்குப்பின், நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான கால அளவையும் குறைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி