உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புது காவல் நிலையம் அயப்பாக்கத்தில் திறப்பு

புது காவல் நிலையம் அயப்பாக்கத்தில் திறப்பு

அம்பத்துார், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, அயப்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், திருமுல்லைவாயல் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்தது. அயப்பாக்கம் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, அயப்பாக்கத்தில், புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன்படி, அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனி, ஜோதி நகர், விவேகானந்தா நகர், அண்ணா நகர், எழில் நகர், அபர்ணா நகர், தேவி நகர், அம்பிகை நகர், அயப்பாக்கம் ஏரி மற்றும் அம்பத்துார் ஏரி ஆகிய பகுதிகளை, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இருந்து பிரித்து, ஏற்கனவே இருந்த அயப்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் சேர்த்து, புதிதாக அயப்பாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. இதை, அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி உட்பட பலர் பங்கேற்றனர். இது, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின், 30வது காவல் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை